‘அண்ணாத்த’ பட ரோஸ்ட் சர்ச்சை – பிலிப் பிலிப் குறித்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவை பாருங்க.

0
612
Blue Sattai Maaran
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியான முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், அண்ணாத்த படம் குறித்து சிலர் நல்ல விமர்சனங்களை சொல்லி வந்தாலும், ஒரு சிலர் தாறுமாறாக நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் “Plip Plip” என்ற யூடுப் சேனலை நடத்தி வரும் சர்வ்ஸ் மற்றும் குருபாய் ஆகியோர் அண்ணத்தா ரோஸ்டட் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதில் இவர்கள் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை குறித்து தாறுமாறாக பேசி இருக்கிறார்கள். அதோடு அந்த வீடியோவில் அவர்கள் படத்தை விமர்சிப்பது மட்டுமில்லாமல் தேவை இல்லாமல் கெட்டவார்த்தைகளை பேசி இருக்கிறார்கள். மேலும், இந்த வீடியோ குறித்து பல யூடியூப் பிரபலங்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் பிரபலங்களில் ஒருவரான பிரசாந்த் அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, அண்ணாத்த ரோஸ்ட் என்று ஒன்னை பண்ணி இருக்காங்க. எனக்கு இந்த சேனல் தெரியும்.

இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து பழைய லுக்கில் சோனியா அகர்வால் – அடேங்கப்பா, என்ன ஒரு Transformation

- Advertisement -

இவங்கள பத்தி பேசுவதால்10 பிசா ப்ரோஜனம் கூட கிடையாது. இவர்களால் தமிழ் யூடியூப் கமிட்டிக்கு தேவை இல்லாமல் கெட்ட பெயரை உருவாக்கி வருகிறார்கள். மேலும், இவர்களால் பிற தமிழ் யூடியூப் பிரபலங்களும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையில்லாமல் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். அதுவும் இங்கிலீஷில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள். நீங்கள் இரண்டு ஜெர்மனியில பிறந்தீர்களா? எல்லாரும் பார்ப்பார்கள் கூட என்று யோசிக்காமல் இவ்வளவு கேவலமாகவா பேசுவது. படத்தை பற்றி நீங்க என்ன வேணாலும் சொல்லுங்கள். தேவையில்லாமல் எதற்கு கெட்ட வார்த்தை, செக்ஸ் பத்தி எல்லாம் எல்லாம் பேசுகிறீர்கள்.

உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? நீங்கள் சோசியல் மீடியாவுல என்ன வேணாலும் பேசுவீங்களா? எப்போதும் இப்படி தான் எல்லா நடிகர்களையும் பற்றி பேசுவார்கள். அதற்காக அமைதியாக இருந்தால் நாளை உங்களுடைய சகோதரி, தாய்மார்களையும் பேசுவார்கள். இவர்களை விடாதீர்கள். இது மிகப் பெரிய தப்பு என்று கொந்தளித்து பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிலிப் பிலிப் ‘அண்ணாத்த’ விமர்சனம் குறித்து பதிவிட்டுள்ள பிரபல யூடுயூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், பிலிப் பிலிப் புகைப்படத்தை பதிவிட்டு ‘தடை செய். தடை செய். தலீவரை ஆபாசமாக பேசிய ப்ளிப் ப்ளிப்பை தடை செய்.’ என்று பதிவிட்டுள்ளார். மாறனின் இந்த பதிவிற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement