இந்தி மொழி குறித்த கேள்வியால் கடுப்பான விஜய் சேதுபதி – அண்ணாமலை கொடுத்த பதிலடி.

0
529
- Advertisement -

இந்தி திணிப்பு குறித்து விஜய் சேதுபதி கொடுத்த பதிலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பி இருக்கும் கேள்வி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய் சேதுபதியின் ஹிந்தி திணிப்பு குறித்த சர்ச்சை தான். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மெர்ரி கிறிஸ்மஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அதில் செய்தியாளர்கள் கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்திருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம், 75 வருடம் நம்முடைய கலாச்சாரம், அரசியல் பின்னணி வந்து இந்திக்கு எதிரானது. இன்றைக்கும் இந்தி தெரியாது, போடா என்ற டி-ஷர்ட் போட்டு தான் இந்தி எதிர்த்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நீங்க வந்து என்று கேட்க ஆரம்பித்தார். உடனே குறிப்பிட்டு விஜய் சேதுபதி, எதுக்கு இந்த கேள்வி கேட்கிறீர்கள்? என்னை மாதிரி ஆட்களிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது? இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார். நீங்க கேள்வியை தப்பாக கேட்கிறீர்கள். இந்த இடத்தில் அது தேவையில்லாத கேள்வி. இந்தியை படிக்காதே என்று யாரும் சொல்லவில்லை. இங்கு படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி:

இப்படி விஜய் சேதுபதி அவர்கள் இந்தியை திணிக்க கூடாது என்று பேசியிருந்தது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று பேட்டியில், ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது. சப்டைட்டில் இல்லாமல் அதைப் பார்த்தால் அது இந்தியை திணிப்பதா? கற்றுக் கொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்பது தான் பாயிண்ட். ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் அவர் நடிக்கிறார்.

ஹிந்தி திணிப்பு குறித்து சொன்னது :

விஜய் சேதுபதி கருத்து எதுவுமே சொல்லவில்லை. அது அவருடைய உரிமை. அவர் இந்தி, போஜ்பூரி, தமிழ் என எதிலும் நடிக்கலாம். அவர் உரிமை. அதே சமயம் கருத்து சொல்லும் போது இரண்டு பக்கமும் பார்க்கணும். தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுவதும் வட இந்தியாவில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தை விட பெங்களூர் ஓகே, அங்கே மொழி பிரச்சனை இல்லை, இங்கே தமிழில் தான் பேச வேண்டியது இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதுபோன்ற மொழி பிரச்சினையால் தான் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது.

-விளம்பரம்-

மொழி பிரச்சனை :

இந்தி விருப்பம் இருந்தால் படியுங்கள், வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள். நாங்கள் மூன்று மொழிக் கொள்கையை சொல்கிறோம். இந்தி படியுங்கள் என்று மோடி சொல்லவில்லை. கட்டாயம் தமிழ், ஆங்கிலம் படிக்கணும். மூன்றாவது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியைப் படியுங்கள் என்று தான் சொல்கிறோம். இது எங்களுடைய கருத்து. விஜய் சேதுபதிக்கு பதில் அல்ல. நான்கைந்து மொழி கூட படியுங்கள். நாளைக்கு நீங்கள் குளோபல் சிட்டிசன். நாளை வெறும் இரண்டு மொழியை வைத்துக் கொண்டு எங்கேயும் போக முடியாது.

விஜய் சேதுபதி குறித்து சொன்னது:

கூடுதல் மொழி தேவை. இந்தி படிக்காவிட்டால் பிரிஞ்ச், ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்கள். இந்தியை நாங்கள் திணிக்கவில்லை. அதேசமயம் விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமா? என்று கேட்க மாட்டோம். அது அவருடைய தனிப்பட்ட திறமை. அவருடைய விருப்பம். நாங்கள் ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தை நாங்கள் கைதட்டி ரசித்து விட்டு போகிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement