என் மீது பழி சுமத்தி சிறைக்கு அனுப்ப பார்க்கிறார்கள் – அன்னபூரணி அரசு அம்மா பதிவிட்ட வீடியோ

0
155
- Advertisement -

பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியாருக்கு பஞ்சம் இல்லை. அதிலும் சில ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் திடீர் சாமியார் குறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சில ஆண்டுக்கு முன் பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி இருந்தது. அது, அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.

-விளம்பரம்-

மேலும், அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும், பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதாஹ்ன் பின் தான் அன்னபூரணி திடீர் சாமியாராக அவதாரம் எடுத்து உள்ளார். இது குறித்து பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டும் கண்டித்தும் வந்தார்கள். தற்போது இவர் திருவண்ணாமலை அருகில் ஆசிரமம் அமைத்து தன்னுடைய பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அன்னபூரணி அரசு அம்மா குறித்த தகவல்:

இதற்கிடையில் இவர் தனக்கு சீடனாக இருந்த ரோகித் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள். இவர் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் அன்னபூரணி பதிவிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அன்னபூரணி அரசு அம்மா வீடியோ:

அதில் அவர், நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நல்ல சக்தி வரும்போது அதை எதிர்க்கவே தீய சக்தியும் வரும். இறுதியில் நல்ல சக்திதான் வெற்றி பெறும். அதே மாதிரி தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீய சக்திகளாக இருக்க கூடிய சில மனிதர்கள் என்னை நேரடியாக எதிர்த்து அழிக்க பார்த்தார்கள். ஆனால், முடியவில்லை. திரும்பவும் அந்த தீய சக்திகளாக இருக்கக்கூடிய சிலர் என்னை சூழ்ச்சி செய்து அழிக்கப் பார்க்கிறார்கள்.

-விளம்பரம்-

விமர்சனங்கள் பற்றி சொன்னது:

சமூக ஊடகங்கள் அல்லது ஊடகங்களில் நான் பேட்டி கொடுத்தால் நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் தான் இருக்கும். அது அந்த தீய சக்திகள் செய்யும் வேலை தான். அவர்கள் ஒரு ஐடி விங்க் வைத்து என்னை அழிக்க செயல்படுகிறார்கள். என்னுடைய பக்தர்கள் பெற்ற ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவை ஐடி விங்கை வைத்து அழித்து விடுகிறார்கள். ஐடி விங் மூலம் என்னை ட்ரோல் பண்ணுகிறார்கள். என்னை கேலி கிண்டல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

தீய சக்தி கொண்டவர்கள்:

இதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாக்களில் எனக்கு எதிராக நிறைய அவதூறு பரப்புகிறார்கள்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி சிறைக்கு அனுப்ப சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், என்னுடைய உண்மை தன்மையும் என்னுடைய சக்தியும் இந்த நிமிடம் வரை என்னை காத்துக் கொண்டிருக்கிறது.
சத்தியம் தான் வெற்றி பெறும். அந்த தீய சக்திகளாக இருக்கக்கூடிய அந்த அதர்மம் வீழ்ச்சி அடையும். அப்போது அந்த தீய சக்தியாக இருந்தவர்கள் யார் என்று மக்களே தெரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement