அண்டங்காக்கா கொண்டக்காரி பாட்டில் வந்த அந்நியன் பாறை – இன்றும் கலையாத சங்கரின் ஓவியங்கள் – புகைப்படங்கள் இதோ.

0
10781

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அந்நியன் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அந்நியன். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா, விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, இந்தி என பல மொழிகளிலும் இந்த படம் வெளிவந்தது.

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விக்ரம் அவர்கள் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விக்ரம் அவர்களின் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். மேலும், இந்தப் படத்தை போலவே படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தது. அதிலும் “ரெண்டக்க ரெண்டக்க” என்ற பாடல் சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டிங்கில் இருந்தது.

- Advertisement -

இந்தப் பாடலின் ஒரு காட்சியில் கற்களின் மீது சிவாஜி, எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல் போன்ற பிரபல நடிகர்களின் படங்களை வரைந்திருப்பார்கள். இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகும் சங்கரின் கை வண்ணம் அப்படியே இருக்கிறது. தற்போது இந்த பாடலில் இடம் பெற்ற நடிகர்களின் புகைப்படங்கள் 15 வருடங்கள் கழித்தும் அப்படியே இருக்கிறது.

தற்போது அந்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பாறைக்கு பெயரே அந்நியன் பாறை என்று தான் அழைக்கப்பட்டு வருகிறது. இது திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டிய புறம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாறையை பார்த்து ரசிகர்கள் சிலர் புகைப்படங்களை கூட எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement