‘பில்ட் அப் கொடுத்த அளவிற்கு படம் ஒர்த் இல்லை’ – ஆன்டி இந்தியன் படத்தின் பிரசாந்தின் விமர்சனத்திற்கு மாறன் பதில்.

0
680
antiindian
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘ஓ சொல்றியா மாமா, ம்ஹும் சொல்றியா’ – சமந்தா ஐட்டம் பாடல் மீது வழக்கு போட்ட அமைப்பு. காரணம் தெரியுமா?

- Advertisement -

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின்னர் இவரது உடலை வைத்து நடக்கும் அரசியல் வேலைகளே இந்த படத்தின் கதை.

இந்த திரைப்படத்திற்கு சுமாரான விமர்சனமே வந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் இந்த படம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல யூடுயூப் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் இந்த படத்தை விமர்சனம் செய்து இருந்தார். மேலும், பில்ட் அப் கொடுத்த அளவிற்கு படம் ஒர்த் இல்லை. டெக்னீகள் ரீதியாக மிகவும் மோசமாக இருக்கிறது. படத்தின் வசனங்கள் தான் காப்பாற்றி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.இதற்க்கு மாறன் நன்றி தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement