‘ஓ சொல்றியா மாமா, ம்ஹும் சொல்றியா’ – சமந்தா ஐட்டம் பாடல் மீது வழக்கு போட்ட அமைப்பு. காரணம் தெரியுமா?

0
392
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Pushpa: Samantha Prabhu Raises The Temperature With Her Sassy Moves In Allu  Arjun Starrer

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது சமந்தா நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் மூலம் சமந்தா அனைத்து இளைஞர்களின் மனதையும் கொள்ளை அடித்து கொண்டார் என்று கூறலாம்.

ஏன்னா, அந்த அளவிற்கு அந்தப் பாடலில் சமந்தா கிளாமர் காட்டி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பின் அவர்கள் அளித்த மனுவில் அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து புஸ்பா படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement