பிகினி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு அனுபமா கொடுத்த பதில் – வைரலாகும் வீடியோ.

0
6627
anupama
- Advertisement -

தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா துவங்கி, சாய் பல்லவி வரை பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் சினியாவிலு ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் தமிழ் தெலுங்கு ஹெய்ந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தில் மலர் டீச்சருக்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா தான்.

-விளம்பரம்-

பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதில் நடித்த 3 கதாநாயகிகளுக்குமே சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்து கிடைத்து விட்டது.மேலும் அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அனுபமாவும் அதன் பின்னர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது தெலுங்கில் இவர் ஏகப்பட்ட பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : 20 நாட்கள் மட்டும் நடித்துவிட்டு 7ஜி படத்தில் இருந்து விலகியுள்ள ஸ்வாதி – அதுக்கு காரணம் இது தானாம்.

- Advertisement -

கடந்த சில நாட்களாக அனுபமா பரமேஸ்வரன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி படு வைரலாக பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து பேசிய அனுபமா குறித்து பேசிய அனுபமா, பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். இதுவரை நான் அவரை சந்தித்ததே இல்லை. நான் அவரை காதலிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது.

Image

எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் ஒரு பெண்ணை பற்றி சமூக வலைதளத்தில் இப்படி ஒரு செய்தி பரவியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அனுபமா ‘ஹ்ம் அனுப்புறேன், உங்க அட்ரஸ்ஸ அனுப்புங்க, பெரிய Frame போட்டு அனுப்பவா’ என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement