20 நாட்கள் மட்டும் நடித்துவிட்டு 7ஜி படத்தில் இருந்து விலகியுள்ள ஸ்வாதி – அதுக்கு காரணம் இது தானாம்.

0
1804
- Advertisement -

காலங்கள் பல கடந்தாலும் தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் நம் மனதில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்திருக்கும் காதல் படங்களில் ஒன்று தான் 7ஜி ரெயின்போ காலனி. இன்றும் இந்த படத்துக்கு என்று ஒரு தனி இடம் மக்கள் மத்தியில் உண்டு. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் ரவி கிருஷ்ணாவும், அனிதா கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி ரவி கிருஷ்ணா– சோனியா அகர்வால் இருவரும் சேர்ந்து பேட்டி அளித்துள்ளார்கள்.

All Your Questions On Ravi Krishna And Sonia Agarwal-Starrer 7G Rainbow  Colony Answered

அதில் அவர்கள் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் அவர்கள் கூறியது, முதலில் இந்தப் படத்திற்கு நான் ஹீரோ இல்லை. இந்த படத்தில் நடிக்க சூர்யா, மாதவன் ஆகிய இவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து இருந்தது. ஆனால், எனக்கு இந்த கதை தெரியும். எப்படின்னா என் அப்பா தான் படத்தின் தயாரிப்பாளர். என்னிடம் அவர் இந்தப் படத்தை பற்றி சொன்னவுடன் நானும் இந்த படத்திற்கு சூர்யா, மாதவன் சாய்ஸ் நல்லா இருக்கும் என்று சொன்னேன். ஆனால், அந்த நேரத்தில் இவர்கள் இரண்டு பேருமே வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து இருந்ததால் புதுமுக நடிகரை வைத்து படம் பண்ணலாம் என்று இயக்குனர் சொன்னார்.

இதையும் பாருங்க : ராமானுஜம் படத்திற்கு முன்பாக நடிக்க இருந்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தட்டி பறித்த வாரிசு நடிகர் – அட, இந்த படம் தானா.

- Advertisement -

அந்த நேரத்தில் நான் பாரினில் இருந்து படித்து முடித்துவிட்டு லீவுக்காக வந்தேன். உடனே அப்பா என்னை செல்வா சாரை பார்க்க சொன்னார். நான் அப்போ உடம்பெல்லாம் குறைத்து இருந்ததால் செல்வா சார் நீங்கதான் நடிக்கணும் என்று சொன்னார். அதே போல் அனிதா கதாபாத்திரத்திற்கு 300 பேரை வைத்து ஆடிசன் பண்ணினார்கள். அதில் சுப்பிரமணியம் சுவாதி தான் இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனார். பின் என்னையும், சுவாதியையும் வைத்து இருபது நாள் சூட்டிங் நடத்தினார்கள்.

Selvaraghavan's 7G Rainbow Colony pair unites again!

அப்போது சுவாதி எம்பிபிஎஸ் படித்து கொண்டிருந்ததால் அவர்களால் இந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு வேற ஹீரோயினை தேட ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் தான் கோவில் படத்தை என்னப்பா தயாரித்திருந்தார். கோவில் படத்தில் சோனியா அகர்வால் நடித்து இருந்ததால் அவரிடம் இந்த கதையை சொன்னோம். அவரும் சரி என்று ஒத்துக் கொண்டார். அப்படித்தான் எங்களுடைய கதிர்– அனிதா ஜோடி சேர்ந்தது என்று புன்னகையுடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement