தான் ஒருவரை காதலிப்பதாக அனுபமா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி சாய் பல்லவி வரை என பல்வேறு மலையாள நடிகைகள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அனுபமா பரமேஸ்வரன்.
இவர் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து இருந்த பிரேமம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் அனுபமா சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது. அதோடு இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு பின்னர் நம் அனைவரயும் கவர்ந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான்.
அனுபமா திரைப்பயணம்:
மேலும், பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் அனுபமா நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தமிழில் கொடி படத்திற்கு பின்னர் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நிறைய படங்களில் பிஸியாக நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
அனுபமா நடித்த படங்கள்:
மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுபமா தமிழில் சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து இருந்தார். அதுவும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த நின்னுக்கோரி திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனுபமா நடித்த படம் ரவுடி பாய்ஸ். முற்றிலும் கல்லுரி கதை களத்தை மையமாக கொண்ட படம்.
அனுபமா காதல் கிசுகிசு:
இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் படிக்கும் தமிழ் பெண்ணாக அனுபமா நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து தற்போது அனுபமா அவர்கள் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதனிடையே நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் நெருங்கி பழகுவதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு வந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை என்று அனுபமா அறிவித்திருந்தார்.
காதலில் விழுந்த அனுபமா:
இந்த நிலையில் அனுபமா காதலிக்கும் நபர் குறித்த தகவல் சோசியல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அனுபமா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இப்போது தனியாக இல்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என்று கூறி தான் காதலிக்கும் நபர் குறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார் அனுபமா. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சினிமா பிரபலமா? பிசினஸ்மேனா? யார் என்று கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.