தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டால்க் ஆப் தி டௌனாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கி இருந்தார். அதே போல தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசனை பிரபல நடிகரான நாணி தொகுத்து வழங்கி வந்தார்.
தமிழ் பிக் பாஸ் போலவே தெலுங்கிலும் சீசன் ஒன்றை விட சீசன் இரண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இதனால் மூன்றாவது சீசனை எப்படியாதவது படு சுவாரசியமாக எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ் மற்றும் தெலுங்கில் மும்மரமாக யோசித்து வருகின்றனர்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடத்துவது குறித்து நடிகை அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அனுஷ்காவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவரை அணுகியுள்ளார்களாம். இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றிலேயே பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்ற பெருமை அனுஷ்காவிக்ரு போய் சேரும்.