ஆசியாவின் கவர்ச்சி கன்னிகள் பட்டியலில் நம்ப பாகுபலி தேவசேனாவும் இடம் பிடித்து உள்ளார். அதுவும் தென்னிந்திய நடிகைகளிலேயே நம்ம பாகுபலி தேவசேனா தான் இடம் பிடித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆசியாவின் செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன பட்டியல் வருடம் வருடம் நடை பெறுகிறது. இதை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்திரிக்கை போல் நடத்தி வருகிறது. மேலும், செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன பட்டியல் முடிவுகளையும் அவர்களே வெளியிட்டு வருகிறார்கள். இது வருடம் வருடம் ஆசியாவில் நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி சென்ற வாரம் நடை பெற்றது. இதில் செக்ஸியான ஆண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் முதலிடத்தை பிடித்து உள்ளார்.
மேலும், பெண்கள் பட்டியலும் தற்போது வெளி வந்து உள்ளது. அதில் முதல் இடத்தை பிடித்தவர் நடிகை ஆலியா பாட். இரண்டாம் இடத்தை நடிகை தீபிகா படுகோன் பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் 22 வது இடத்தை நம்ம இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா பிடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தென்னிந்திய நடிகைகளிலேயே நடிகை அனுஷ்கா செட்டி தான் அந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கரமாக ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள். அதோடு Sexiest of the decade என்ற பட்டியலிலும் அனுஷ்கா செட்டி அவர்கள் எட்டாவது இடத்தை பிடித்து உள்ளார். கடந்த பத்து வருடங்களாக தென்னிந்திய சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
இவர் முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனா உடன் இணைந்து ‘சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு ‘இரண்டு’ என்ற திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து தமிழ் மொழியில் அறிமுகமானார். இதுவரை நடிகை அனுஷ்கா அவர்கள் சினிமா உலகில் 10 வருடங்களுக்கு மேலாக 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் ஆரம்பத்தில் படங்களில் கவர்ச்சி நாயகியாக தான் வலம் வந்தார். பின்னர் புராண கதைகளில் நடிக்க தொடங்கினார். அதுவும் அவர் நடித்த அருந்ததி, பாகுபலி போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னால் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் தனது உடல் எடையை அதிகரித்து நடித்து இருந்தார்.
அதற்குப் பின் அவர் எடையை குறைக்க பலயங்கரமாக சிரமப்பட்டார். இதனாலே அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்று சொல்லலாம். அதற்கு பிறகு அவர் வெளிநாடுகளில் சென்று தன் உடல் எடையை குறைத்து தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி வந்துள்ளார். இப்போது தான் அவருக்கு சினிமாவில் ஏதோ பட வாய்ப்புகள் வருகிறது என்று தகவல் வந்துள்ளது. தற்போது நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சைலன்ட் என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.