அனுஷ்கா சர்மா கல்யாண மோதிரம் எவ்ளோ கோடி தெரியமா !

0
2290
- Advertisement -

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தளபதி விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இருவருக்கும் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த திருமணம் மிகக் கோலாகலமாக இல்லை என்றாலும் திருமணம் நடத்த ஆன செலவு நம்மை மலைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.
இத்தாலியின் டஸ்கானி நகரத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு விராட் மற்றும் அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணம் நடைபெற்ற அந்த கிராம் 800 வருட பழமை வாய்ந்த எழில் கொஞ்சும் இடமாகும்.

-விளம்பரம்-

இந்த திருமணம் நடைபெற்ற ஹோட்டலின் ஒரு வார வாடகை மட்டும் கிட்டத்தட்ட ₹ 95 லட்சம் ஆகும். ஒருநாள் வாடகை கிட்டத்தட்ட ₹ 13 லட்சம். இந்த திருமணத்திற்கு போட்டோக்கள் மற்றும் வீட்டியோக்கள் தொகுத்தது, சமந்தா – நாக சைதன்யா திருமணத்திற்கு எடுத்தவர்கள்தான்.
மேலும், உடை மற்றும் அலங்காரம் செய்தது ‘சபியாச்சி’ என்ற இந்திய நிறுவனம். இதில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த வைர மோதிரத்தின் விலை மட்டும் கிட்டத்தட்ட ₹ 1 கோடி ரூபாய்.

- Advertisement -

இதற்கே இப்படி என்றால், இவர்களது உடை மதிப்பு எல்லாம் இன்னும் நம்மை எகிற வைக்கும். வரும் 16 ஆம் தேதி மும்பையிலும் 21ஆம் தேதி டெல்லியிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைத்து கிரிக்கெட் மாற்றம் பாலிவுட் வட்டாரங்களை அழைத்து உபசரிக்க உள்ளது இந்த ஜோடி. விராட் மற்றும் அனுஷ்காவிற்கு Behind Talkies சார்பாக வாழ்த்துக்கள்.

Advertisement