அவர் அனுபவித்த போராட்டங்கள் துன்பங்களை பார்க்கும்போது ஒரு பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கு – ஏ.ஆர் .முருகதாஸ்

0
259
Mkstalin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். இவர் முதன் முதலாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு,கத்தி,சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபாத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல் எங்கள் பெருமை” என்ற புகைப்பட கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை முதல்வர் முதற்கொண்டு பலர் பார்வையிட்டார். அவரை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் அவருடன் காமெடி நடிகர் யோகி பாபுவும் சமீபாத்தில் பார்வையிட்டனர்.

- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் :

இந்த நிலையில் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் முருகதாஸ் “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனாக இருந்தாலும் தனக்கென ஒரு தனி வரலாற்றை உருவாக்கி இருக்கிறார். நாம் அவரை பற்றி அறிந்த விஷயத்தை இங்கு வந்து பார்க்கும் போது அவரோடு பயணித்த உணர்வை கொடுத்து மிகப்பெரிய நம்பிக்கையையும், மாறியதயையும் அவரின் மீது உருவாக்குகிறது.

தமிழ்நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டர் :

மாணவர்கள் கண்டிப்பாக இந்த புகைப்பட கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய முருகதாஸ் “தமிழகம் தமிழ் நாடாக மாறியதற்கு பல தலைவர்கள் பல போராட்டங்களில் உயர்நீத்தனர். அதை நம் முதல்வர் யாருக்கும் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். அதனை நாம் சட்டசபையிலேயே பார்த்துவிட்டோம். அதனால் தமிழ் நாடு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது என்றார்.

-விளம்பரம்-

பயோ பிக் படம் எடுக்கலாம் :

மேலும் செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்க முடியுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முருகதாஸ் “தனக்கு 14 வயது இருக்கும் போதே இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று. ஒரு பெரிய தலைவரின் மகனாக இருந்தும் பல போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டு பல மனதை பாதிக்கும் சம்பவங்கள் அவரின் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் மிசா காலத்தில் அவர் பட்ட துன்பங்கள், போராட்டங்கள் போன்றவைற்றை வைத்தே ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக எடுப்பதற்கு உத்வேகமான இருக்கும் என்று கூறினார் இயக்குனர் முருகதாஸ்.

Advertisement