- Advertisement -
மெர்சல் படம் முடிந்து விஜயின் அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டது. இந்த படத்தில் முறுகதாஸுடன் மூன்றாவது முறையாக கை கோர்க்கிறார் விஜய்.
இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி 19ல் துவங்கி ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது. மேலும், படத்திற்கான குழுவை தேர்வு செய்து வருகிறார் முருகதாஸ்.
-விளம்பரம்-
ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரனும், படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல ஹீரோயினாக நடிக்க நயன்தாரா அல்லது ரகுல் ப்ரீத் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிந்தது. ஆனால், தற்போது இருவரும் இல்லை, நடிகை கீர்த்தி சுரேஸிடம் பேசி வருகிறது படக்குழு. முன்னதாக விஜயுடன் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
Advertisement