தமிழகத்தில் நேற்று தூத்துக்குடியில் நடந்த கொடூரமான சம்பவத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல விஷயங்களுக்கு வாய் திறக்காத நடிகர்கள் கூட இந்த கொடுரமான தாக்குதகுக்கு ட்விட்டரில் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த சம்பவத்திற்கு தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் தொடங்கி இந்த தலைமுறை நடிகர்களான தனுஷ், ஜெயம் ரவி, சித்தார்த் போன்ற நடிகர்கள் வரை தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

நேற்று தூத்துக்குடியில் நடந்த உரிமை போராட்டம் வன்முறை என்று கருதி போலீசார் அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் “அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது..!” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும் இந்த சம்பவத்தினால் பல்வேறு பொது மக்களும், அரசியல் பிரபலங்களும் இந்த சம்பவத்ங்கிற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். தங்களது உரிமைக்காக போராடினால் அநியாயமாக கொல்லப்படுவார்கள் என்று இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இதுகுறித்து தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Advertisement