பாலிவுட் சினிமா குறித்து ஏ ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் இசையமைப்பாளர் ஆனார்.

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

Advertisement

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். இப்படி இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் உதயநிதி நடிப்பில் வந்த மாமன்னன் படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை அடுத்து இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார்.

Advertisement

ஏ ஆர் ரகுமான் அளித்த பேட்டி:

இப்படி இவர் படங்களில் பிசியாக இருந்தாலும், அவ்வபோது பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், பாலிவுட் என்றாலே ஹிந்தி திரை உலகம் மட்டும்தான் என்று உலகமே நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், பாலிவுட் என்ற வார்த்தையை நான் எப்போதும் பயன்படுத்துவதில்லை. அது ஹாலிவுட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அப்படியே பயன்படுத்தினால் அதை நான் திருத்தம் செய்வேன். இங்கு அற்புதமான திறமையான நபர்கள் இருப்பது உலகத்துக்கு தெரிய வேண்டியது முக்கியமான ஒன்று.

Advertisement

சினிமா குறித்து சொன்னது:

அவர்களுக்கு பண உதவியும் வெளிச்சமும் கிடைத்தால் அவர்களுக்கு தங்களிடம் உள்ள நல்ல படைப்புகளுடன் மேலே வருவார்கள். இந்தியா என்பது ஒரு கலாச்சாரம் அல்ல. வானவில் போல பல கலாச்சாரங்கள் இணைந்தது. திரைப்படங்களுக்கு இசையமைத்தால்தான் உதவிகள் கிடைக்கும் என்பதை நான் ரோஜா பட வாய்ப்பு கிடைக்கும் முன்பாகவே உணர்ந்துவிட்டேன். என்னுடைய குருவாகவும் நண்பராகவும் மணிரத்தினம், சங்கர், ராம்கோபால், வர்மா, சுபாஷ் ஆகியோர் இருக்கிறார்கள். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement