இந்தி மொழி சர்ச்சை – பாரதிதாசன் வரிகளுடன் ஏர்.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படம் படு வைரல். (அமித் ஷாவிற்கு பதிலடியா ? )

0
690
Arrahman
- Advertisement -

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். முக்கியமாக தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுத்திருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : வடிவேலு மகனை பார்த்துளீர்கள் – அவரின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா ? இதோ அவர்கள் மூவரின் திருமண புகைப்படங்கள்.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் பதிவிட்ட புகைப்படம் :

மேலும், தன்னிடம் வேண்டும் என்று ஹிந்தியில் கிண்டலாக பேசும் நபர்களிடம் பதிலுக்கு தமிழில் பேசி பதிலடி கொடுத்து இருக்கிறார். அதே போல் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னுடைய ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் அதில் ழகரத்தை ஏந்தியிருக்கும் புரட்சிப் பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவிற்கு பதிலடியா ? :

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்தி பேசியதால் மேடையை விட்டு இறங்கிய Ar :

ஏ ஆர் ரஹ்மான் இப்படி சர்ச்சையை கிளப்புவது முதன் முறையல்ல. ஏ ஆர் ரஹ்மான், கதை எழுதி, அவரே தயாரித்த 99 சாங்ஸ் என்ற என்ற படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர்நடித்து இருந்தனர். இந்த படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த பிரெஸ் மீட்டின் போது ஏ ஆர் ரஹ்மானிடம் தமிழில் பேசிவிட்டு ஹீரோவிடம் தொகுப்பாளினி இந்தியில் பேசி வரவேற்றார்.

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் :

அப்போது ஏ ஆர் ‘இந்தி’ என்று கேட்டுவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று ‘நான் உங்க கிட்ட மொதெல்லே கேட்டேன் தமிழ் பேசுவீங்களானு’ என்று வேடிக்கையாக தமாஷ் செய்துவிட்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் ஏர் ஆர் ரஹ்மானின் இந்த பதிவும் வைரலாகிவருகிறது . மேலும், அமீத்ஷாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

Advertisement