வடிவேலு மகனை பார்த்துளீர்கள் – அவரின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா ? இதோ அவர்கள் மூவரின் திருமண புகைப்படங்கள்.

0
599
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை தீர்ந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் Lyca நிறுவனத்துடன் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் லொகேஷன் பார்க்க லண்டன் சென்று திரும்பிய வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையும் பாருங்க : கூர்கா, Money Heist வுடன் ஒப்பிட்டு Trending வந்த ஹேஷ் டேக். பீஸ்ட் படம் காப்பியா ? விளக்கம் கொடுத்த நெல்சன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

வடிவேலு மகன் சுப்பிரமணியன் :

சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய வடிவேலு நான் நலமுடன் இருப்பதாக அறிவித்து இருந்தார். வடிவேலு சரோஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும். சுப்பிரமணியன் என்ற ஒரே ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் புவனேஸ்வரி என்ற கூலி தொழிளாலியின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

மூத்த மகள் கன்னிகா :

This image has an empty alt attribute; its file name is 1-256.jpg

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அதில் இரண்டாவதாக பிறந்த பிள்ளைகள் ட்வின்ஸ் ஒரு மகன் மற்றும் ஒரு மகள். சமீபத்தில் தான் சுப்பிரமணி பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் தான் சினிமாவில் நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார். பெரும்பாலும் இவரது மகனை பற்றி தான் பலருக்கும் தெரியும். ஆனால், இவரது மகள்களை பற்றியும் அவர்களின் புகைப்படங்களையும் இது வரை யாரும் பெரிதாக கண்டிருக்கமாட்டார்கள்.

-விளம்பரம்-

இரண்டாம் மகள் கார்த்திகா :

This image has an empty alt attribute; its file name is 1-258.jpg

வடிவேலுக்கு மொத்தம் ஒரு மகனை தவிர மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்று சொன்னோம் அல்லவா. இதில் வடிவேலுவின் மூத்த மகள் பெயர் கன்னிகா, இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சதிஷ் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. வடிவேலுவின் இரண்டாம் மகளின் பெயர் கார்த்திகா, CA பட்டதாரியான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணேஷ் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மூன்றாம் மகள் கலைவாணி :

This image has an empty alt attribute; its file name is 1-257.jpg

இவரது கடைசி மகள் பெயர் கலைவாணி. எம்பிஏ பட்டதாரியுமான கலைவாணிக்கும் சென்னையில் வசிக்கும் பொறியாளர் ராமலிங்கம் (எ) ராம்குமாருக்கும் என்பவருக்கும் சென்னையில் உள்ள ஐராவத நல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமக்கள் வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Advertisement