உலகம் முழுவதும் உள்ள புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் ஒருவர். இவரை இசைப்புயல் என்று தான் அனைவரும் அழைப்பார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய இசை திறமைக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். அதோடு ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர்.
சமீப காலமாகவே உலக அளவில் சினிமா உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயம் காப்பி. அதே மாதிரி தான் ரீமேக் செய்யும் பிரச்சனை தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆர் ரகுமான் அவர்கள் தனது பாடல்களின் ரீமிக்ஸ் வடிவங்கள் எரிச்சல் தருவதாக தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். தனது பாடல்கள் ரீமேக் செய்யப்படுவது குறித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் கூறியது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஓகே ஜானு என்ற படத்தில் ஹம்மா ஹம்மா என்ற பாடல் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. இது எனக்கு பிடித்திருந்தது.
ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட என்னுடைய எந்த பாடலும் எனக்கு பிடிக்கவில்லை. அதிலும் சில பாடல்கள் ரீமேக் செய்து இருப்பது எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். உண்மையில் இந்த பாடல் ரீமேக் செய்து இருப்பதை நான் வெறுக்கிறேன். இப்படி ரீமேக் செய்யும் பாடல்களுக்கு நான் ஆதரித்தால் மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள். அதோடு ரீமேக் செய்து வெளியிடும் பாடல்கள் ட்ரெண்டிங் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமை விவாகரத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார் மேலும், அந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து 99 சாங்ஸ் படத்தின் பாடல்களை இசைத்து உள்ளார். உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் புது பாடல் தொகுப்பை ஒன்றை உருவாக்க போவதாக அறிவித்திருந்தார். அதன் சம்பந்தமாக தனது படத்திற்கான வேலைகளை கூட நிறுத்தி விட்டார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், விக்ரமின் கேப்ரா, மற்றும் சிவகார்த்திகேயன் அயலான் என பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். பாலிவுட்டில் கரண் ஜோஹர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக்த் படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.