‘எங்கள் இலக்கு தமிழ்நாடு தான்’ இசைஞானியுடன் இசைப்புயல் வெளியிட்ட Selfie வீடியோ – இயக்குனர் மோகன் போட்ட கமன்ட்.

0
253
mohan
- Advertisement -

இளையராஜா ஏ ஆர் ரஹ்மானின் வைரல் வீடியோ குறித்து இயக்குனர் மோகன் கமன்ட் செய்து இருக்கிறார்.இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

என்னதான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாலும் இன்றும் இளையராஜாவை தனது குரு ஸ்தானத்தில் தான் வைத்து இருக்கிறார் ரஹ்மான். அதே போல சமீப காலமாக இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ட்விட்டரில் அடிக்கடி உரையாடி வருகின்றனர். கடந்த மார்ச் 5ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கலாச்சார கூட்டமான எக்ஸ்போ 2020 துபாயில் நடந்தது. இதில் இளையராஜா பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

ரஹ்மான் – ராஜா உறவு :

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இளையராஜா துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிற்கு வருகை தந்து இருக்கிறார். அப்போது இளையராஜாவுடன் ஏ ஆர் ரகுமான் புகைப்படம் எடுத்திருந்தார். அதில் ‘எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவிருக்கு மேஸ்ட்ரோ இளையராஜா அவரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோவில் அவர் ஒன்றை இசையமைப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இளையராஜாவின் ஹங்கேரி பயணம் :

இதற்கு இளையராஜாவும் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது என்று பதில் அளித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் இளையராஜாவுடன் பயணித்த போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

ரஹ்மான் பகிர்ந்த வீடியோ :

அதே போல ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்று இருந்தார். அங்கிருந்து சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் இன்று காலை (செப்.1) பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

மோகன் போட்ட கமன்ட் :

அந்த வீடியோவைப் பற்றி அவர், “நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்” என்று பதிவிட்டுள்ளார். தான் அமெரிக்காவில் இருந்தும் இளையராஜா ஹங்கேரியில் இருந்தும் திரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவிற்கு இயக்குனர் மோகன் ‘சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement