தன்னுடைய மகளை குறித்து பெருமையாக ஏ ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் இசைப்புயலாக கருதப்படுபவர் ஏ ஆர் ரகுமான். இவருடைய இசையில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏ ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா. தற்போது இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார்.
அதாவது, இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மின்மினி. இவர் இதற்கு முன்பே பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி, ஏலே, லோனர்ஸ் போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், சி கௌரவ் காளை உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எட்டு வருட காத்திருப்பு பிறகு இந்த படம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.
மின்மினி படம் :
இதற்கு காரணம், திரையில் நடிகர்கள் உடைய உண்மையான வயதையும், பருவத்தையும் காட்டுவதற்காகத்தான் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருக்கிறார் ஏ ஆர் ரகுமானின் மகள் மூத்த மகள் கதீஜா. இதனாலே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் பேட்டி :
இந்த நிலையில் படத்தினுடைய சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டிருக்கிறது. இதை ஏ ஆர் ரகுமான் நேரில் வந்து பார்த்து தன்னுடைய மகள் கதீஜாவை பெருமையாக பேசியிருக்கிறார். பின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ. ஆர். ரகுமான், நான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் இந்த மாதிரியான கதையை பார்க்கிறேன். ரொம்ப இயல்பாகவும், அற்புதமாகவும் இயக்குனர் கதையை சொல்லி இருக்கிறார். முதல் படத்திலேயே கதீஜா சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
கதீஜா குறித்து சொன்னது:
என் மகள் என்பதற்காக நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அவர் நன்றாக இசையமைத்திருக்கிறார். கதீஜா பற்றி எந்த ஒரு செய்தி இணையத்தில் வெளிவந்தாலும் மில்லியன் கணக்கான பேர் அவரை விமர்சித்து பேசி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படத்தின் இசை மூலம் கதீஜா பதிலடி கொடுத்திருக்கிறார். கதீஜாவை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அவருக்கு இன்னும் நிறைய வெற்றிகள் கிடைக்க வேண்டும்.
படம் குறித்து சொன்னது:
சமீப காலமாக எல்லா திரைப்படங்களிலும் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ் ரசிகர்களும் சோர்வடைந்து இருக்கலாம். அவர்களுக்கெல்லாம் இந்த படம் நிச்சயம் பிடிக்கும். நிறைய ரசிகர்கள் இந்த படத்திற்கு வருவார்கள் என்று படக்குழுவினர் மற்றும் தன்னுடைய மகளையும் பாராட்டி பேசியிருக்கிறார். இப்படி ஏ ஆர் ரகுமான் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.