‘என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவளுடையது’- தன்னுடைய மனைவியை புகழும் ஏ ஆர் ரகுமான்

0
810
- Advertisement -

என்னுடைய ஆடை அலங்காரத்திற்கு காரணம் என் மனைவி தான் என்று ஏ.ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் கலந்துக்கொண்டு தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

-விளம்பரம்-

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

- Advertisement -

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதனை அடுத்து இவர் “லால் சலாம்” அந்த திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இப்படி ரகுமான் பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் தன் மனைவி குறித்து ஏ ஆர் ரகுமான் அளித்து இருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏ. ஆர். ரகுமான் அவர்கள் சாய்ரா பானு என்பவரை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி:

இவர் பெரும்பாலும் விழாக்கள் மற்றும் மீடியா முன்பு தனியாக தான் சென்று இருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் தன்னுடைய மனைவி சாய்ரா உடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சிகளில் அணிந்து வரும் உடைகள் எல்லாம் பயங்கர ஸ்டைலிஷ் ஆகவும் இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் அளித்த பேட்டியில், என்னுடைய மனைவி உண்மையில் ஸ்டைலாக இருப்பதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறார். அவர்தான் என்னை அலங்கரித்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அவர்தான் எனக்கு தேவையான உடை உள்ளிட்ட பல பொருட்களை வாங்குகிறார். அவர் எனக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து தான் அனைத்தையும் வாங்குகிறார்.

தன் மனைவி குறித்து சொன்னது:

அதை அதை அவர் எனக்காக பார்த்து பார்த்து வாங்குகிறார். மேலும், அவர் எதை வாங்கினாலும் நான் அதை அணிவேன். என்னுடைய அனைத்து அசைவுகளும் அவரிடம் இருந்து வருகிறது. அதேபோல் என்னுடைய மனைவி ஒரு பொருள் வாங்கி வந்து அணிய சொன்னவுடன் நான் அதை வேண்டாம் என்று மறுக்க மாட்டேன். ஆனால், அவருக்கு கருப்பு நிறம் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் அடிக்கடி கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்கி வருவார். அதனால் நான் ஒரு முறை அவரிடம் வேறு நிறத்தில் வாங்கி தர முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய மனைவி ரொம்ப பிடிவாதமானவர். பல விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் என்று கூறி இருக்கிறார்.

Advertisement