தமிழ் கற்றுக்கொள்ள லிங்க்கை பதிவிட்டு ‘மல்லிப்பூ’ பாடகி மதுஸ்ரீயை கலாய்த்த ஏ.ஆர் – குசும்புபா இவரு.

0
455
Madhusree
- Advertisement -

மல்லிப்பூ பாடல் பாடகி மதுஸ்ரீக்கு தமிழை கற்றுக் கொள்ள ஏ ஆர் ரஹ்மான் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருந்தது. இந்தபடத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற மல்லி பூ பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்த பாடலை பாடகி மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே இசையின் மீது இருந்த ஆர்வத்தினால் முறையாக இசையை கற்றுக் கொண்டார்.

-விளம்பரம்-

பாடகி மதுஸ்ரீ குறித்த தகவல்:

அலைபாயுதே படத்தின் இந்தி வெர்ஷனலில் தான் இவர் முதன் முதலாக பாடினார். அதற்கு பிறகு இவரை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தது பாடகர் வித்யாசாகர் தான். இவருடைய இசையில் வெளியான ஆஹா எத்தனை அழகு என்கிற படத்தில் உதித் நாராயன் உடன் இணைந்து ‘நிலாவிலே நிலாவிலே’ என்ற பாடலை பாடியிருந்தார். அதன் பின் இவர் தமிழ் சினிமா உலகில் மருதாணி, மயிலிறகே மயிலிறகே, கண்ணன் வரும் வேளை போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பதிவு:

நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பாடிய மல்லிப்பூ பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடலுக்கு மூன்று விருதுகள் கிடைத்து இருக்கின்றது. இப்படி இவர் நிறைய தமிழ் பாடல்களை பாடி இருந்தாலும் இவருக்கு தமிழ் தெரியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் டீவ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார். அதாவது, பாடகி மதுஸ்ரீ அவர்கள் டீவ்ட் ஒன்றை போட்டு இருந்தார். அதை டேக் செய்து ஏ.ஆர்.ரகுமான், விருது வாங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து விரைவாக தமிழை கற்றுக் கொள்வதற்கான quora லிங்கை பதிவில் இணைத்திருக்கிறார்.

Advertisement