சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் வரும் துணை நடிகைகள் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுவார்கள். அதிலும், படத்தை விட நிஜ வாழ்க்கையில் அவர்களை பார்த்தால் அந்த நடிகையா இது என்ற அளவிற்கு அவர்கள் அடையாளம் தெரியாத அளவில் தான் இருப்பார்கள். அந்த வகையில் அறம் படத்தில் நடித்த இந்த நடிகையும் ஒருவர். இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியானது அறம் திரைப்படம். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூல் நல்ல ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தில் நயன்தாராவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு மாவட்ட ஆட்சியாளராக நடித்திருந்தார். ஆழ்துளை குழியில் மாட்டிய ஒரு சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடும் அம்மாவாக நடித்தவர் தான் இந்த நடிகை. இவரின் பெயர் சுனு லட்சுமி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சிரித்தாள் ரசிப்பேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் செங்காத்து பூமியிலே, டூரிங் டால்கீஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதுவரை இவர் நடித்த படங்களில் கிராமத்து கெட்டப்பில் நடித்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் இவர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘சங்கத்தலைவன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தறி நெசவாலையில் வேலை பார்க்கிறார் பயந்தாங்கொள்ளி கருணாஸ். முதலாளி முன் அதிர்ந்து பேசினாலே பாவம் என்கிற அளவுக்குக் கோழை.
முதலாளியின் அலட்சியத்தால் ஆலையில் ஒரு அசம்பா விதம் நடக்க, மனம் பொறுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நிற்கிறார் கருணாஸ். இதனால் முதலாளியோடு முட்டிக்கொள்ள, உள்ளூர்த் தொழிற்சங்கத் தலைவர் சமுத்திரக்கனியின் ஆதரவு கருணாஸுக்குக் கிடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் பொதுவுடமைக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு கருணாஸ் போராட்டக் களத்தில் தலைவனாக உருவாக, அவரின் எதிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. பின்னர் போராட்டம், ரத்தம் என்று நீளும் கதையில் இறுதியில் சங்கத்தலைவன் வென்றாரா இல்லையா என்பது தான் கதை.