நீலிமா விலகிய சில நாட்களின் நிறுத்தப்பட்ட அரண்மனை கிளி சீரியல் – ஓராண்டிற்கு பின் காரணம் சொன்ன ஹீரோ.

0
6753
aranmanai
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பல சீரியல்களை ஒளிபரப்பியது.

-விளம்பரம்-

சினிமா டைட்டிலில் ஒளிபரப்பாகும் சீரியல் சென்டிமென்டாக ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த ‘அரண்மனைக்கிளி’ தொடரும் ரசிகர்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றாக திகழ்ந்துவந்தது கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா தர்ஷன், மோனிஷா, பிரகதி, நீலிமா என்று பலர் நடித்து வந்தனர்.

இதையும் பாருங்க : அஞ்சலிய கெடுத்ததே அவன் தான். அவங்கள மேடம்னு கூப்புடுலனு இப்படி செஞ்சான் – புலம்பிய ஜெய் படத்தின் தயாரிப்பாளர்.

- Advertisement -

389 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதியோடு திடீரென்று நிறுத்தப்பட்டது. அதே போல இந்த சீரியல் நிறுத்தப்பட்ட சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த தொடரில் நடித்து வந்த நீலிமா, இந்த தொடரில்க் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து தெரிவித்த அவர், நான் கேமரா முன் நிற்கும்போது மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே உள்ளேன். குழந்தை நட்சத்திரம் முதல் தற்போது வரை நான் நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அதனை நான் ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

‘துர்கா நீ போய் வா’ எனக்கூறி நீங்கள் தான் என் பலம். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் நிறுத்தப்பட்ட காரணம் ககுறித்து ஒரு வருடம் கழித்து விளக்கமளித்துள்ள இந்த சீரியலின் நாயகன் சூர்யா தர்ஷன், அரண்மனைக்குள் கொரோனா உள்ளே வந்து கிளியை பாதித்துவிட்டது. லாக் டவுன் காரணமாக படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை. இந்த தொடருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதில் கூறி உள்ளார்.

-விளம்பரம்-

Advertisement