தமிழிசையை கிண்டல் செய்து பின் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா – வைரலாகும் பழைய வீடியோ.

0
514
tamilisai
- Advertisement -

பிஜேபி தமிழிசையை கிண்டல் செய்து பேசியதற்கு அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்டு போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு தன் நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருந்தார். தன்னுடைய சிறந்த பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கி இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. அதன் மூலம் இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 4ல் நிஷா :

மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த சீசனில் அதிகம் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்ட நபரில் நிஷாவும் ஒருவர். மேலும், இவரை நெட்டிசன்கள் விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் செய்து இருந்தார்கள். இதனால் நிஷா மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். பின் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிஷா தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நிஷா:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து இருந்தார். அதன் பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதனால் இவர் மீது இருந்த விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. மேலும், நிஷா தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அதில் இவர் வெளியிடும் காமெடி வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழிசையை கிண்டல் செய்த நிஷா:

சமீபத்தில் கூட நிஷா தன்னுடைய சேனலில் புது வீடு வாங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தொகுத்தும், படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் பிஜேபி தமிழிசையை கிண்டல் செய்து பேசியதற்கு அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மன்னிப்பு கேட்ட நிஷா:

அதாவது, மேடை நிகழ்ச்சி ஒன்றில் நிஷா அவர்கள் தமிழிசை குறித்து கிண்டல் செய்து பேசியிருந்தார். அதிலும், அவர் தாமரை மலரும் மலரும் என்று சொல்கிறார். அவருக்கு படர்தாமரைதான் வளரப்போகிறது என்று ஏளனமாக பேசி இருந்தார். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து அறந்தாங்கி நிஷா, மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கும் தமிழிசை அக்காவுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. நான் பேசியது தவறுதான். இனிமேலும் இந்த தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

Advertisement