அவ தலையில் ரத்தம், பார்த்ததும் மயங்கி விழுந்திட்டேன் – தனக்கு நேர்ந்த கார் விபத்து குறித்து கண்ணீர் மல்க கூறிய அறந்தாங்கி நிஷா.

0
438
- Advertisement -

பெண்களால் காமெடியில் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியவர் நிஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்பிஏ படித்து முடித்து அழகாய் இருக்கிறவர்கள் ஜெயிச்சதைவிட வாழ்க்கையில் அசிங்கம், அவமானம் பட்டவர்கள் தான் ஜெயித்தது அதிகம் என்பதை நிரூபித்து காண்பித்தவர். நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இவருடைய நகைச்சுவைப் பேச்சும், பாடி லேங்குவேஜும் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தை தட்டிச்சென்றார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நிஷா கலந்து கொண்டிருந்தார். இவரை மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும், அசிங்கப்படுத்தினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், மீடியா துறைக்கு வருவதற்கு முன் இவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக 13 ஆண்டுகள் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷா போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார்.

- Advertisement -

நிஷாவின் சின்னத்திரை பயணம்:

தற்போது இவர் கருப்பு ரோஜா என்று ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பல வகையான காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம்போல் நிஷா விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டார். இப்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இவர் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி தான் இந்த நிலைமைக்கு முன்னேறி இருக்கிறார். இந்நிலையில் நிஷா சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு நடந்த விபத்து குறித்து கூறியிருப்பது,

நிஷா அளித்த பேட்டி:

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் மாசமாக இருக்கும் போதே தொகுத்து வழங்கி இருந்தேன். பாப்பா பிறந்த எட்டாவது நாளில் நான் அவளை தூக்கிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்து விட்டேன். எல்லோரும் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே. அப்படி என்ன பணம் வேண்டும்? என்று தேவையில்லாமல் என்னை திட்டி இருந்தார்கள். இந்த இடத்திற்கு வருவதற்கு நான் பட்ட அவமானமும் கஷ்டமும் அதிகம். அது எனக்கு மட்டும்தான் தெரியும். அதனால் இந்த இடத்தை தக்க வைப்பது ரொம்ப முக்கியம் என நினைத்து தான் பாப்பாவை தூக்கிக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தேன். ஒரு நாள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சூட்டிங்கிற்காக வந்துட்டு இருக்கும் போது செங்கல்பட்டு அருகே திடீர் என்று எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது.

-விளம்பரம்-

நிஷாவிற்கு நடந்த கோர விபத்து:

எங்கள் யாருக்குமே என்ன நடக்குதுன்னு தெரியவில்லை. கார் கவிழ்ந்து விழுந்து, குழந்தை சத்தத்தையே காணோம். பின் ஆக்சிடென்ட் பார்த்துட்டு ஒரு மூணு பசங்கள் தான் எங்களுக்கு உதவி செய்ய வந்தார்கள். அந்த பையனிடம் என் குழந்தையை கொஞ்சம் பாருங்க என்று சொன்னேன். பிறகு தான் குழந்தை அழும் சத்தம் கேட்டது. கார் சீட்டுக்கு அடியில் குழந்தை இருந்ததாள். அவளை தூக்கும்போது உடல் முழுக்க ரத்தம். அப்போது குழந்தைக்கு 60 நாள் தான் ஆனது. அவ காது பிஞ்சிருன்னு சொன்ன உடனே எனக்கு மயக்கம் வந்தது. பிறகு அவளுக்கு தையல் போட்டார்கள். அவளுடைய அழுகுரலை என்னால கேட்க முடியல. என் குழந்தையை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று அழுதேன்.

ஹாஸ்பிடலில் எங்களுக்கு உதவி செய்தவர்கள்:

எனக்கும் காலில் ரத்தம் வந்தது. ஆனால், மனசு முழுக்க என் மகளை நினைத்து தான் வேதனையில் இருந்தது. உடனே ஈரோடு மகேஷ் அண்ணா, ரவூஃபா மேம் இவங்க இரண்டு பேரும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். ரவூஃபா மேம் தான் என்னுடைய ஆஸ்பிட்டல் பில் கட்டினார்கள். அவங்களுக்கும் எங்களை காப்பாற்றி ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்த அந்த பசங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இப்பவரை அந்தப் பசங்களோட நானும், மகேஷ் அண்ணாவும் பேசிக் கொண்டுதான் இருக்கும். அந்த சமயத்தில் அவங்க செய்த உதவி ரொம்பவே பெரிது. அந்த விபத்தை அவ்வளவு எளிதாக என்னால் மறக்க முடியவில்லை. இன்னைக்கு வரைக்கும் அதை நினைத்து வருந்தாத நாளே கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதைப்பற்றி நான் சொன்ன பிறகுதான் என் சொந்தக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது என்று ரொம்ப எமோஷனலாக நிஷா பேட்டி அளித்தார். இப்படி நிஷா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement