சூப்பர் ஹிட் அஜித் பட இயக்குனருடன் இணைந்த பிக் பாஸ் ஆரவ்.! செம லக் தான்.!

0
482

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் ‘ராஜபீமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது.

இதையும் படியுங்க : ஆரவ்வுடன் லிவிங் டுகேதரா.!முதன் முறையாக பதிலளித்த ஓவியா.! 

- Advertisement -

அதே போல இந்த படத்தின் ஓவியாவும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலில் இருந்து சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ராஜபீமா படத்தை தொடர்ந்து நடிகர் ஆரவ், இயக்குனர் சரனுடன் நடிக்க உள்ளாராம்.

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த சரண் தற்போது ஆரவ்வை வைத்து ‘மார்க்கெட் ராஜா MBBS’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் ஆரவ். இந்த படத்தில் காவ்யா தபர் என்ற புதுமுக நடிகை ஆரவ்விற்கு ஜோடியாக நடிக்கிறார்.மேலும, ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு போன்ற பலர் படத்தில் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement