rolex ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அன்பு வெளியிட்ட உருக்கமான அறிக்கை – வைரலாகும் பதிவு.

0
1248
arjundas
- Advertisement -

கமல், சூர்யா ரசிகர்களிடம் அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேற்று மொழிப் படங்கள் வெற்றி பெற்று தமிழ் படங்கள் சரியாக ஓடாமல் இருந்த நிலையில் விக்ரம் படத்தின் மூலம் அந்த எண்ணத்தை லோகேஷ் கனகராஜ் மாற்றி இருப்பதால் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜுன் தாஸ் போட்ட டீவ்ட்:

கைதி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாய அர்ஜுன் தாஸ் தற்போது விக்ரம் படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் கமலஹாசன், சூர்யா ரசிகர்களிடம் அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் பதிவு ஒன்று போடுகிறார். அதில் அவர் கூறியிருப்பது, மச்சி ஒரு சீன் என்று லோகேஷ் கனகராஜ் அழைக்கும் போது எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம், சரி என்று சொல்வோம். ஆனால், அந்த ஒரு காட்சியில் ஒரு பக்கம் கமல் சார், மறுபக்கம் சூர்யா சார். என்ன செய்ய முடியும்? நாம் கொண்டாடி தீர்க்கின்ற இரண்டு நடிகர்கள் நம் கண்முன் நிற்கும் போது அவர்களை பார்க்க தான் தோன்றும்.

-விளம்பரம்-

நன்றி சொல்லிய அர்ஜுன் தாஸ்:

மானிட்டரில் அவர்களை மீண்டும் மீண்டும் பார்த்தது தான் என் வாழ்வின் சிறந்த அனுபவம். இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். எனக்கு பிடித்த 3 பேர், கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷுடன் வேலை செய்துள்ளேன். கமல் ஹாசனை பார்க்க சாம்கோவுக்கு வெளியே காத்திருந்தது போய் இன்று அவர் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நனவாகிவிட்டது. இந்த வாய்ப்புக்கு நன்றி. அதேபோல் நன்றி சூர்யா சார். உங்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு கிடைத்த கௌரவம்.

அர்ஜுன் தாஸ் மன்னிப்பு கேட்ட காரணம்:

நான் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன் என்கிற தகவல் வெளியானதும் கமல் சார் மற்றும் சூர்யா சாருடன் சேர்ந்து நடித்த அனுபவம் பற்றி ரசிகர்களாகிய நீங்கள் கேட்டீர்கள். ஆனால், அப்பொழுது என்னால் அதுகுறித்து சொல்ல முடியவில்லை. அதற்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது கேட்டால் அது லைஃப்டைம் செட்டில்மென்ட் என்றே சொல்வேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பதிவிட்ட அர்ஜுன் தாஸின் இந்த ட்வீட் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement