உமாபதி பெயரைச் சொன்னப்போது ஷாக் ஆகிட்டேன் – தனது மருமகன் குறித்து அர்ஜுன்

0
442
- Advertisement -

தன்னுடைய மகளின் திருமணம் குறித்து நடிகர் அர்ஜுன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்து இருந்தார்கள். பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

ஐஸ்வர்யா-உமாபதி திருமணம்:

மேலும், ஜூன் 10-ஆம் தேதி ஐஸ்வர்யா- உமாபதி திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் அனைவருக்குமே நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ஜுன், தம்பி ராமையா, உமாபதி, ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

அப்போது அர்ஜுன், தம்பி ராமையா குடும்பம் ரொம்ப பண்பாடு உள்ள குடும்பம். நானும் தம்பி ராமையாவும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். அப்போது அவர் எனக்கு சம்மந்தி ஆகுவார் என்று எனக்கு தெரியாது. அதேபோல் நான் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருந்தேன். அதில் உமாபதி போட்டியாளராக வந்திருந்தார். அவர் திறமைசாலி, அமைதியானவர், நகைச்சுவை குணம் கொண்டவர். அவர் எனக்கு மருமகனாக வருவார் என்றும் தெரியாது.

-விளம்பரம்-

மகள் காதல் குறித்து சொன்னது:

ஒரு நாள் என்னுடைய இரண்டாவது மகள், உங்களிடம் ஐஸ்வர்யா தனியாக பேச வேண்டும் என்று சொன்னார். அப்போது எனக்கு இது காதல் விஷயம் தான் என்று புரிந்தது. அதற்கு நான், யார் அந்த பையன்? என்று கேட்டதற்கு உமாபதி என்று சொன்னார். எனக்கு பயங்கர ஷாக். உமாபதியை எனக்கு ஏற்கனவே தெரியும். அதனால் ஓகே சொல்லிவிட்டேன். உமாபதி நிஜமாகவே திறமைசாலி. உமாபதி கூடிய விரைவிலேயே ஒரு ஆக்சன் கிங்காக பார்க்கலாம்.

தம்பிராமையா சொன்னது:

என்னுடைய மருமகன் என்று நான் சொல்லவில்லை. உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் இவர்கள் இருவருக்குமே வேண்டும் என்று கூறியிருந்தார். இவரை அடுத்து தம்பிராமையா, எங்கள் குடும்பத்திற்கு மருமகளாக ஐஸ்வர்யா வந்தது எங்களுடைய பாக்கியம். அவர் எனக்கு மகள். என்னுடைய மருமகளிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று தான் நான் வேண்டுகோள் வைக்கிறேன். என் மகள் திருமணத்திற்காக நான் மருமகனை தேர்வு செய்யும் பணியை என் மகனிடம் கொடுத்தேன். அதேபோல் அவனுடைய வாழ்க்கையையும் அவனே தேர்வு செய்து கொண்டான் என்று கூறியிருந்தார்.

Advertisement