லெஸ்பியன் படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ ஆர் ரகுமான் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தீபா மேத்தா இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஃபயர். இந்த பட்டத்தில் நந்திதா தாஸ் மற்றும் ஷபானா ஆஸ்மி நடித்து இருந்தார்கள்.இந்த படம் லெஸ்பியன் உறவை மையமாக கொண்ட காதல் கதை. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமானிடம் லெஸ்பியன் படத்தில் இசையமைத்தது குறித்து சொன்னது, நான் பல்வேறு அனுபவங்கள் இணைந்த வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறேன். அது எனது உலக கண்ணோட்டத்தை உருவாக்கியது. ஆனால், நான் உருவாக்கும் கலையில் அவை ஒருபோதும் தலையிடவில்லை. நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். என்னுடைய கான்கிரீட் வீடு ஒரு சேரிக்கு பக்கத்தில் இருந்தது.

Advertisement

என்னுடைய வீட்டு பக்கத்தில் கமலஹாசன் உதவியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் இருந்தார். நான் பேசும் போதும் அல்லது ஒரு கருத்தில் நிற்கும் போதும் எனது முடிவுகளில் தெளிவாக இருக்கிறேன். அது நான் புத்தர் என்பது போல் இல்லை. நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். எல்லாவிதமான படங்களையும் பார்த்திருக்கிறேன். அதனால் தொழில்முறையாக அந்த விஷயங்களை சமாளிக்க எனக்கு தெரியும். தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமாக நிற்பது வேறு.

நான் ஃபயர் படத்திற்கு இசையமைத்த போது அது ஒரு நிலைப்பாடு தான். அது லெஸ்பியன் படம். இவை என்னுடைய மதிப்புகள் அல்லது என்னுடைய நிலைப்பாடுகளை குறிக்கவில்லை. இருந்தாலும், நான் மனித குலத்திற்காக நிற்க முடியும் என்று உணர்கிறேன். இயக்குனர் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல முயற்சிப்பதால் நான் அந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

Advertisement

அதேபோல் பொன்னியின் செல்வன் 2 படத்திலும் கொலை செய்யும் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கிறது. அது ஒரு வரலாறு. அது உங்களால் மாற்ற முடியாது என்று கூறி இருக்கிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

Advertisement

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், மேற்கத்திய இசையை இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார்.

Advertisement