ஆதிபுருஷ் திரைப்படம் ஹாலிவுட்டில் இருந்து எடுக்கப்பட்ட கார்ட்டூன் போல இருக்கிறது என்று நடிகர் அருண் கோவில் விமர்சித்திருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர். பின் இவர் நடிப்பில் வந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், 2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் இந்திய அளவில் பிரபலமானது. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பான் இந்திய ஸ்டாராக மாறினார்.

தற்போது மீண்டும் பாண் இந்தியா படமாக பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ்.
ஆதிபுருஷ் ராமாயணம் பற்றிய கதை. ராமாயணம் கதையை மையக்கமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும், இதுவரையில் எந்த படமும் தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தை தழுவி எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதிபுருஷ் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது. அதோடு பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பதினால் எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமானது. மேலும், இப்படத்தை ஓம் ராவத் இயக்க தயாரிப்பாளர் புஷன் குமார் தயாரித்து இருக்கிறார்.

Advertisement

ஆதிபுருஷ் படம்:

மேலும், ஆதிபுருஷ் திரைப்படமானது இராமாயணத்தில் வரும் யுத்த காண்டம் பற்றிய கதையாகும். ராமன் தன்னுடைய ராஜ்யமான அயோத்தியில் கிடையாது. 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்கிறார். அப்போது அவருடன் பயணித்த அவரது மனைவி சீதை ராவணனால் நாடுகடத்தப்படுக்கிறார். பின் ராவணனை ஹனுமான் போன்றவர்களின் உதவியுடன் எப்படி வீழ்த்தி சீதையை காப்பாற்றினார் என்பது தான் மீதி கதை. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த விமர்சனம் :

ஆனால், படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினுடைய கிராபிக்ஸ் எல்லாம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஆதிபிருஷ் படம் குறித்து நடிகர் அருண் கோவில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இத்தனை ஆண்டுகளாக நாம் அனைவரும் அறிந்து விரும்பி ராமாயணத்தை பார்த்திருக்கிறோம்.

Advertisement

அருண் கோவில் காட்டம்:

ராமாயணத்தில் என்ன தவறு? சில விஷயங்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒருவேளை பட குழுவுக்கு ராமர் மற்றும் சீதை மீதான சரியான நம்பிக்கை இல்லை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் அவர்கள் இந்த மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். ராமாயணம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். என்றைக்கும் அது எந்த வகையிலும் சிதைக்க கூடாது. ராமாயணம் இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியம். இப்போது அது பேசப்படும் விதம் குறித்து வேதனையாக இருக்கிறது.

Advertisement

ராமாயணம் குறித்து சொன்னது:

ராமாயணத்தின் அடிப்படை உணர்விலிருந்து விலகிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராமாயணத்தை ஹாலிவுட்டில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட ஒரு கார்ட்டூனை போல காண்பிப்பது சரியல்ல என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் கருத்துதான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு வெளியான ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அருண் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement