விஜயின் அரசியல் குறித்து நடிகர் அருண்பாண்டியன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த லியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதை எடுத்து தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 69 என்ற படத்தில் நடிக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் கடைசியாக நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற தகவல் தெரியவில்லை.

Advertisement

விஜய் திரைப்பயணம்:

பலரும் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, லோகேஷ் போன்ற பிரபலமான இயக்குனர்களின் பெயர்களை கூறுகிறார்கள். இந்த படத்திற்கு பிறகு விஜய் அவர்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

விஜய் அரசியல்:

இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.

Advertisement

தமிழக வெற்றி கழகம் :

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். விஜய் அரசியலுக்கு வருவதை ஒட்டி பலரும் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement

அருண்பாண்டியன் பேட்டி:

இந்த நிலையில் விஜயின் அரசியல் குறித்து நடிகர் அருண்பாண்டியன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், விஜய் உடன் நான் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன். எனக்கு அவருடன் நிறைய பிரச்சனை இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் செய்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாகவே சினிமாவில் தங்களுடைய காலம் முடிந்த பின்பு தான் பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், விஜய் சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே துணிந்து ஒரு முடிவெடுத்து இருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement