திருநெல்வேலியில் தனது சொந்த நிலத்தில் விவசாயியான இளம் தமிழ் நடிகை. வைரலாகும் நாத்து நடும் வீடியோ.

0
7134
keerthi
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50000-த்தை நெருங்க உள்ளது. இதுவரை இந்த நோயினால் 1,694 பேர் பலியாகியும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பின்பற்றபட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களை போல சினிமா தொழிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி பொழுதை கழித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், நடனமாடி வீடியோ வெளியிடுவது, பாடல் பாடுவது, யோகா செய்வது, சமையல் செய்வது என்று செய்து பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால்,பிரபல நடிகரின் மகன் விவசாயத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தான். இவர் தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

கடந்த சில நாட்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை உழும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த வீடியோவில், இந்த நாட்களில் அனைவரும் மீண்டும் விவசாயம் செய்வோம். விவசாயம் நம்முடைய சொத்து. பொது இடம் கிடையாது. நாம் அதிக பொறுப்புகளுடன் இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார் கீர்த்தி பாண்டியன்.

-விளம்பரம்-

மற்ற நடிகைகளை போல இவரும் இதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று நினைந்து வந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் உண்மையாகவே விவசாயம் செய்து வருகிறார். மேலும், நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

Advertisement