சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14793 ஆகவும், 488 பேர் பலியாகியும் உள்ளார்கள்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : ஆடை வடிவமைபாளருக்கு கொடுக்க காசு இல்லை. பின்னர் இப்படி தான் அந்த கவுன் உருவானது. சுஷ்மிதா சென்னின் அழகி பட்டத்தின் கதை.
கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் உயிரை பணய வைத்து போராடி வருகின்றனர். கொரோனா வைரசால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் வீட்டின் உள்ளே அடைந்து கிடக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சினிமா பிரபலங்கள் பலரும் உடற்பயிற்சி, வீட்டு வேலை, புத்தகம் படிப்பது போன்றவைகளை செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள் தன்னுடைய ட்விட்டரில் இயற்கையை ரசிக்கும் போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த நாட்களில் அனைவரும் மீண்டும் விவசாயம் செய்வோம். விவசாயம் நம்முடைய சொத்து. பொது இடம் கிடையாது. நாம் அதிக பொறுப்புகளுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் அற்புதமாக, எந்த ஒரு சிரமமுமின்றி அழகாக டிராக்டர் ஓட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் கீர்த்தி பாண்டியனும் ஒருவர். இவர் தன்னுடைய படிப்பு முடிந்ததும் சில வருடங்கள் தன்னுடைய தந்தையின் சிங்கப்பூர் நிறுவனத்தை கவனித்து வந்தார். தற்போது ஹீரோயினியாக களம் இறங்கியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமா உலகில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.