மனைவியின் இறப்பிற்கு பின் வந்த முதலாம் ஆண்டு பிறந்தநாள் – அருண் ராஜா பதிவிட்ட உருக்கமான பதிவு,

0
549
arunraja
- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தாக்கத்தினால் பல லட்சம் உயிர்கள் பலியாகின. பொதுமக்களை போன்று தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் . நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அருண் ராஜா காமராஜாவின் மனைவியும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் காலமாகி இருந்தார். தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார்.

- Advertisement -

கொரோனாவால் இறந்த மனைவி :

அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். மனைவி இறந்த போதே அருண் ராஜாவிற்கும் கொரோனா தொற்று குணமாக ஆகாததால் அவர் பாதுகாப்பு உடை அணிந்து வந்து தன்னுடைய மனைவிக்கு இறுதி சடங்கை செய்து இருந்தது பலரை நிகழ்ச்சிகள் ஆழ்த்தியது.

This image has an empty alt attribute; its file name is 1-55-1024x908.jpg

கவச உடையில் சென்று இறுதி சடங்கு :

கவச உடையுடன் தனது மனைவிக்கு இறுதி சடங்கை செய்ததை பார்த்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் கலங்கினர். இந்த வீடியோவை பார்த்த பலரும் யாரும் இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது என்று வருத்தப்பட்டனர். மனைவிக்கு இழப்புக்குப் பிறகு அவ்வப்போது அவர் தன்னுடைய மனைவி பற்றிய பதிவுகளை சமூகாவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.  இந்நிலையில் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றி போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Image

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து :

அதில் தன் மனைவியின் ஓவியம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் “எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். ஹேப்பி பர்த்டே பாப்பி” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அருண் ராஜா இயக்கிய கனா படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

நெஞ்சுக்கு நீதி :

அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் ‘நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் வெளியாகி வைரலானது. கலைஞரின் பிரபலமான நூலின் பெயரை படத்தின் தலைப்பாக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்த படம் மே 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement