சிம்பு கேட்டது இத்தனை கோடி – அருண் விஜய்க்கு வாய்ப்பு வந்தது எப்படி – அஞ்சாதே 2 லேட்டஸ்ட் அப்டேட்.

0
2991
mysskin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற பாணியில் தான் இருக்கும். அந்தவகையில் மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த எட்டாவது படம் தான் துப்பறிவாளன்.

-விளம்பரம்-
Arun Vijay

இது விஷாலின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அமைத்த படம் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் ரொம்ப நாளாக சினிமாவில் நிலைதடுமாறிய பிரசன்னாவுக்கும் இந்த படம் மூலம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்தது. மீண்டும் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தான் மிஸ்கின் அவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து சைக்கோ படத்தை இயக்கி இருந்தார். சைக்கோ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

சைக்கோ படத்திற்கு பிறகு மிஷ்கின் அவர்கள் பிரசன்னா, விஷாலை வைத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கினார். மேலும், சைக்கோ படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தன்னுடைய சம்பளத்தை அதிகமாக கேட்டார். பின் மிஸ்கினுக்கும், விஷாலுக்கும் இடையே இந்த சம்பள பிரச்சனை பயங்கர யுத்தமாக மாறியது. பிறகு துப்பறிவாளன் படத்தை விஷால் இடமே கொடுத்து விட்டு மிஸ்கின் வெளியேறிவிட்டார்.

பின் மிஷ்கினுக்கு யாரும் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று விஷாலும் அறிக்கை விட்டதாக கூறப்பட்டது. இதற்கு சவால் விடும் விதமாக மிஸ்கின் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். மிஸ்கின் இயக்கத்தில் ஹிட் கொடுத்த படமங்களில் அஞ்சாதே படமும் ஒன்று. அதனால் மிஸ்கின் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார். பின் படத்திற்கான பணிகளை ஆரம்பித்தார். ஏற்கனவே நடிகர் சிம்பு அவர்கள் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லி இருந்தார். பின் மிஷ்கின் சிம்புவிடம் கதை சொல்ல சிம்புவும் கதைக்கு ஓகே சொல்லி விட்டார்.

-விளம்பரம்-

ஆனால், சிம்பு சொன்ன சம்பளம் கேட்டு மிஸ்கின் மிரண்டு போனார். சிம்பு 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். அதுமட்டுமில்லாமல் சிம்பு சூட்டிற்கு சரியாக வருவாரா என்பது உத்தரவாதம் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு பின்பு இந்த கதையை அருண் விஜய்யிடம் சொல்லி இருக்கிறார் மிஷ்கின். அருண் விஜய் கதைக்கு ஓகே சொல்லிட்டார். இப்போது வில்லனை தேர்ந்தெடுப்பதுதான் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பிரசன்னா தான் ஏற்கனவே அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் அருண்விஜய் ஹீரோவாகவும், பிரசன்னா வில்லனாகவும் மாபியா படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் சமீபத்தில் தான் வெளி வந்தது. அதோடு மட்டுமில்லாமல் மாஃபியா -2 மீண்டும் எடுப்பதாகவும்கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசன்னா அஞ்சாதே-2வில் இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனால் மிஸ்கின் அவர்கள் புதிய வில்லனை தேடிக்கொண்டிருக்கிறார். லாக் டவுன் முடிந்த பின்பு தான் அஞ்சாதே–2 படத்திற்கான ஷூட்டிங்கும், தகவல்களும் வெளியாகும்.

Advertisement