மிஷன் சாப்டர் 1 படம் குறித்து எமோஷனலாக அருண் விஜய் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

பின் இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதற்குப் பின் இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் மிரட்டி கொண்டு வருகிறார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மிஷன் சாப்டர் 1. இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisement

அருண் விஜய் பதிவு:

இந்த நிலையில் அருண் விஜய் அவர்கள் எமோஷனல் ஆக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், மிஷன் சாப்டர் 1 படத்திற்கு நீங்கள் கொடுத்த மாபெரும் வெற்றி. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எனக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. அது மட்டும் இல்லாமல் தசை நார் கிழிந்ததால் இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த வலியை இந்த வெற்றி மறக்கச் செய்தது. உங்களுடைய அன்பு என்னை மீண்டும் அதிக வலிமையாக மாற்றி இருக்கிறது. ஆக்ஷனில் விரைவில் களமிறங்கும் என்று கூறியிருந்தார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு:

இதற்கு முன்னதாகவே அருண்விஜய் தன்னுடைய மிஷன் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள மதுரை சென்று இருந்தார். அப்போது தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்த விளையாட்டிற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தார்கள்.

Advertisement

அருண் விஜய் பேட்டி:

அந்த வகையில் அருண் விஜய் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்திருக்கிறார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழர்களுடைய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் நேரடியாக பார்ப்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. என்னோட மிஷன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தப் படம் தொடர்பான தியேட்டர் விசிட்டுக்காக தான் மதுரை வந்திருந்தேன். அப்படியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

Advertisement

கையில் அடிபட்ட காரணம்:

எனக்கு நீண்ட நாட்களாக ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய படங்களில் ஆக்சன் காட்சிகளில் டூப் போடக்கூடாது என்று நான் நினைப்பேன். அப்படிதான் மிஷன் படத்திலும் நான் நடித்திருக்கிறேன். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலமாக இருக்கிறது. நான் தற்போது பாலா சாரின் வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த திரைப்படத்தின் படபிடிப்பின் போது அடிபட்டுவிட்டது. இரண்டு மாதமாக நான் பெட் ரெஸ்ட்டில் தான் இருக்கிறேன். பத்து நாட்களில் நான் சரியாகி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement