ஐபிஎல் போட்டியின் போது தோனியின் என்ட்ரிக்கு தனது பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்து அருண் ராஜா காமராஜா நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஐபிஎல் 2023 தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி வருகிறது இன்னமும் சில போட்டிகள் மட்டுமே அ ணைத்து அணிகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சென்னை அணி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை அணியின் DJ தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறார்.

குறிப்பாக மகேந்திர சிங் தோனி மைதானத்திற்குள் துளையும் போது ரசிகர்கள் அனைவரையும் அதிரவைத்தவர் டிஜே ஜென். இவர் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது விதவிதமான பாடல்களை போட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியின் போது கூட விராட் கோலிக்கு போற்கண்ட சிங்கம் பாடலை போட்டிருந்தார் அது பயங்கரமாக வைரலாகி இருந்தது.

Advertisement

அதே போல வார்னருக்கும் நாட்டு நாட்டு பாடலை போட்டு அசத்தியிருந்தார். அது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகியது. அதோ போல பல நேரங்களில் DRS, TIME OUT போன்ற நேரங்களில் பாடல்களை போட்டு மைதானத்தயே தெறிக்க விடுவார். அப்படியொரு நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடர்ல் சேப்பாக்கம் மைதானத்தில் டிஜே ஜென் கடந்த சில நாட்களாக செய்து வரும் சம்பவம் பெருமளவு வைரலாகி வருகிறது.

அதாவது தோனி கடந்த 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும் போது விக்ரம் படத்தில் வரும் once upon a time பாடலை போட்டு மைத்தனத்தையே அதிர வைத்தார். அந்த சம்பவம் பெரிய அளவு வைரலாகியது. அதற்கு பிறகு KGF படத்தில் வரும் toofan toofan பாடல் பெரும் அளவு வைரலாகியது. அதற்கு பிறகு பாஷா பாடல், திரை தீப்பிடிக்கும், படையப்பா BGM, சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என தோனிக்கு பொருந்தும் வகையான பாடல்களை போட்டு வைரலாகி வருகிறார்.

Advertisement

இவர் போடும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெட்ரா நிலையில் அடித்த போட்டியில் எந்த பாடலை இவர் போட இருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்த போது ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற நெருப்புடா நெருங்குடா பாடல் ஒலிபரப்பப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் இந்த பாடலை பாடிய அருண்ராஜா காமராஜா, இந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement