கழுத்தில் தாலியுடன் இருக்கும் சயீஷா.! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

0
1838
Arya-Sayesha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் செய் சாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதையும் படியுங்க : இந்த நடிகர்களுக்கெல்லாம் டப்பிங் பேசியவர்களை பார்த்திருக்கீங்களா.! புகைப்படங்கள் இதோ.! 

- Advertisement -

கடந்த சில வாரம் முன்னர் (மார்ச் 8) இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதே போல இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் சயீஷா கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதனை கண்ட பலரும் ஹனிமூன் புகைப்படத்தில் இல்லாத தாலி இப்போது எப்படி வந்தது என்று வினவினார். ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் கஜினிகாந்த் படத்தின் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement