பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் செய்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலநடிகர்கள் மட்டுமே தங்களது சொந்த குரலில் டப்பிங் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்த நடிகைகளாகவே இருப்பதால் அவர்களின் மொழி உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இருப்பதில்லை
மேலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல டப்பிங் கலைஞர்களின் குரல்களை தேர்ந்தெடுப்பதும் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு டப்பிங் குரல்களை கொடுத்தவர்கள் யார் என்பதை காணலாம்.
மோகன் : எஸ் என் சுரேந்தர்
90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் மோகன். இவருக்கு எஸ் என் சுரேந்தர் என்பவர் தான் படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
அனுரங் காஷ்யப் : மகிழ் திருமேனி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைககா நொடிகள்’ படத்தில் வில்லனாக அசத்தியவர் இந்தி நடிகர் அனுரங் கஷ்யப். இவருக்கு டப்பிங் பேசியது பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி தான்.
பிரபாஸ் : சேகர்
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி ‘ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் பிரபாஸுக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது சேகர் என்பவர் தான்.
ராணா டகுபதி : ஆலம்
அதே பாகுபலி திரைப்படங்களில் வில்லனாக அனைவரையும் கவர்ந்த பிரபல நடிகர் ராணா டகுப்பதிக்கு ஆலம் என்பர் தான் டப்பிங் பேசியுள்ளார்.
திரிஷா : சின்மயி
தென்னிந்திய சினிமாவில் ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இருப்பினும் திரிஷா ஒரு தமிழ் படத்தில் கூட சொந்த குரலில் பேசியது இல்லை. அவருக்கு பல படங்களில் டப்பிங் பேசியது பிரபல பாடகியான சின்மயி தான்.