கொஞ்சம் பைட், லவ் இருந்து இருக்கலாம் – மஞ்சுமோல் பாய்ஸ்ஸுக்கு பெண் கொடுத்த விமர்சனம். அசோக் செல்வனின் பங்கமான கமண்ட்

0
478
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து தான். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படத்தில் ஒன்று மஞ்சுமெல் பாய்ஸ். இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது.

கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ:

பிரபலங்கள் பலருமே இந்த படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமலஹாசனை படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் பட குழுவினர் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்று போட்டோ எடுத்திருக்கிறார்கள். பின் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக ராஜ் கமல் பிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

படம் குறித்த ரிவ்யூ:

இது இணையத்தில் மிக அதிகமாக வைரலாகி இருந்தது. இப்படி எல்லோரும் மஞ்சுமோல் பாய்ஸ் படத்தை புகழ்ந்து பாராட்டி வரும் நிலையில் பெண் ஒருவர் கொடுத்து இருக்கும் ரிவ்யூ தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, படத்தில் நட்பு பாண்டிங் நல்லாக இருக்கிறது. திரில்லிங்காக இருந்தது. ஆனால், கொஞ்சம் காதல் காட்சிகள், சண்டை எல்லாம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நெட்டிசன்கள் மீம்ஸ்:

கிளைமாக்ஸ் வேற மாதிரி கொடுத்திருக்கலாம் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த பொண்ணை கேலி செய்து வருகிறார்கள். இன்னும் சிலர், அந்த பெண்ணை திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் அசோக் செல்வன், ஜி.பி. ,முத்து மீம் ஒன்றை பகிர்ந்து அந்த பெண்ணை கேலி செய்து இருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement