10 கோடி மக்கள்ல பெரும்பாலானவங்களுக்கு என்னை தெரியும் – பா.ம.க சார்பாக போட்டியிடும் தங்கர் பச்சான் பேட்டி.

0
116
- Advertisement -

பாமகவின் வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சன் களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் கடந்த சில வாரங்களாகவே பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. எனவே நான்கு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் பாஜக தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்ற பல கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சான்:

அதில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக தங்கள் பச்சன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், என் பெயர் தங்கர் பச்சன். தமிழகத்தில் 10 கோடி மக்களில் பெரும்பாலான பேருக்கு என்னை தெரியும். நான் 37 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன்.

தங்கர் பச்சான் பேட்டி:

சினிமாவில் நான் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களுக்காக எடுக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்க்கை, வழி, வேதனை, அவர்களுடைய பிரச்சனைகளை வைத்து தான் படம் கொடுத்திருக்கிறேன். பேய், ஆக்சன், சண்டை, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போன்ற படங்களை எல்லாம் நான் எடுத்ததில்லை. மக்களுடைய நலனுக்காக தான் நான் என்னுடைய படங்களை கொடுத்திருக்கிறேன். அதனால் மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். மேலும், மக்களுக்கு பிரச்சினை என்று வந்தபோதிலும் நான் முதல் ஆளாக வந்து நின்றிருக்கிறேன்.

-விளம்பரம்-

மக்கள் குறித்து சொன்னது:

இயற்கை சீற்றங்கள், பேரழிவு போன்ற பல காலகட்டங்களில் நான் மக்களுக்காக குரல் கொடுத்து நின்றிருக்கிறேன். நான் எதற்கு கட்சியில் இணைந்து இருக்கிறேன் என்றால் மக்களை காப்பாற்றுவதற்காக தான். நான் எதற்கு வந்து இருக்கிறேன்? மற்ற வேட்பாளர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும். மேலும், நான் லண்டனின் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அப்போது எனக்கு கால் வந்தது. கட்சியில் வேட்பாளராக நிற்க சொல்லி கேட்டார்கள். பின் ஒரு மணி நேரம் யோசித்த பிறகு தான் நான் ஒத்துக்கொண்டேன்.

அரசியல் குறித்து சொன்னது:

அதே சமயம் மக்களுக்காக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடலூர் மாவட்டம் தான் அதிகம். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது இரண்டு அடியிலேயே தண்ணீர் வெள்ளப்பெருக்கு வரும். ஆனால், இப்போது 750 அடி தோண்டினாலும் கூட தண்ணீர் வரவில்லை. காரணம், மின்சாரத்தை தயாரிக்கிறேன் என்று தண்ணீரை அதிகம் எடுக்கிறார்கள். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன். கண்டிப்பாக இதற்கு தீர்வு வாங்கிக் கொடுப்பேன். நீர் வளத்தை காக்க வேண்டும் அதை விடுத்து தேவையில்லாத வகையில் நீரை வீண் அடிக்கிறார்கள். மின்சாரத்தை தயாரிக்க நீர் தேவையா? என்று பேசி இருக்கிறார்.

Advertisement