இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு ஒரு திருநங்கையாக நடித்துள்ளார். மேலும், இதில் நடிகை சமந்தா, ரம்யாகிருஷ்ணன், பகத் பாசில் போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் மிகவும் வித்யாசமான கெட்டப்பில் இருப்பதை கண்டு பலரும் வியந்து போனார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் "சூது கவ்வும்" படத்தில் நடித்த அசோக் செல்வன் விஜய் சேதுபதியை பொம்பள நாட்டு கட்டை என்று ட்வீட் செய்துள்ளார்.Justu cantu waitu! Annae neenga oru pombala naatukattayum kooda! ? #superdeluxe @VijaySethuOffl https://t.co/m9jKprpj3D
— Ashok Selvan (@AshokSelvan) October 8, 2018
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான "96" படத்தின் ஒரு காட்சியில் நடிகை த்ரிஷா, விஜய் சேதுபதியை "நீ ஒரு ஆம்பள நாட்டு கட்ட டா" என்று கூறுவார். அதனை குறிப்பிட்டே விஜய் சேதுபதியின் பெண் வேடத்தை ஜாலியாக கலாய்த்துள்ளார் நடிகர் அசோக் செல்வன்.




