தள்ளிப்போன ‘என்ன சொல்ல போகிறாய்’ ரிலீஸ் – அஸ்வினின் பேச்சு காரணமா ? இன்னும் இத்தனை மாசம் வெளியாவது சந்தேகம் தான்.

0
523
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வின் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அஸ்வின், இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.

இதையும் பாருங்க : பாவனி அவ்வளவு செய்தும் நேற்று பஸ் டாஸ்கில் அபிநய் செய்துள்ள செயல் – போட்டு கொடுத்த நிரூப். முழித்த அபிநய்.

- Advertisement -

அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று மிகவும் சோகத்துடன் கூறி இருந்தார். என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் இந்த மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்வைத்து திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் தற்போது வெளியீட்டை அடுத்த ஆண்டு (2022) தள்ளிவைக்க தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக இருப்பதால் அப்போதும் படத்தை வெளியிட முடியாது. அதே போல அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் இந்த படம் வெளியிட திட்டமிட்டாலும் அதே நாளில் விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாக இருப்பதால் அப்போது அஸ்வின் படம் வெளியாவது சந்தேகமே என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

-விளம்பரம்-
Advertisement