கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஷாம் மற்றும் விஷால் நடித்த ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஷாம் ஜோடியாக அறிமுமானவர் நடிகை அசின்
அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார்.
பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின். திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது அசின் தனது மகள் ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் அசின் மகள் அச்சு அசலாக நாஸ்ரியாவை போலவே இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.