அசுரன் பட மரியாம்மா, தெலுங்குக்கு சென்றதும் வேற மாரியம்மா – இப்படி கிளாமருக்கு தாராளம் காட்டி இருக்காரே. FCUK பட வீடியோ இதோ.

0
93355
asuran
- Advertisement -

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் பல்வேறு இளம் நடிகைகள் வந்து கொண்டு இருகின்றார்கள். அந்த வகையில் சிறு வயதிலேயே தனது நடிப்புத்திறன் மூலம் அனைவரையும் வியக்க வைத்தவர் நடிகை அம்மு அபிராமி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான்.

-விளம்பரம்-

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த படம் ராட்சசன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை அமலா பால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை அபிராமி. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது நடிகை அபிராமியை தான். மேலும், ராட்சசன் திரைப்படம் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அபிராமி.

இதையும் பாருங்க : ஒரு பக்கம் ட்ரெண்டிங்கில் #1YearOfMasterSelfie இன்னொரு பக்கம் #அஜித்நீயெல்லாம்மனுசனா. காரணம் இதான்.

- Advertisement -

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். நடிகை அபிராமி அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த படம் “தம்பி”. இந்த படத்திலும் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அசுரன் படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் அனைவர் மனதையும் கொள்ளைகொண்ட அம்மு அபிராமி சமீபத்தில் இவர் FCUK என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரு பாடலில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடித்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் பல நடிகைகள் தெலுங்கு சினிமாவிற்கு சென்றால் கிளாமருக்கு கிறீன் சிக்னல் கொடுத்து விடுகிறார்கள் அந்த வகையில் அம்மு அம்பிராமியும் விதிவிலக்கல்ல.

-விளம்பரம்-
Advertisement