ஒரு பக்கம் ட்ரெண்டிங்கில் #1YearOfMasterSelfie இன்னொரு பக்கம் #அஜித்_நீயெல்லாம்_மனுசனா. காரணம் இதான்.

0
3172
master
- Advertisement -

மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது.தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுட்ரெண்டிங் செய்த்தனர் . இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த செல்ஃபி எடுத்து இன்றோடு (பிப்ரவரி 9) ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்ய தற்போது ட்விட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்த ஹேஷ் டேக்கோடு #அஜித்_நீயெல்லாம்_மனுசனாஎன்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே பிரபல பத்திரிகை ஒன்றில் அஜித் பற்றி ‘அஜித் முதலில் நீ மனுஷனா இரு சட்டையை சுழற்றும் தயாரிப்பாளர்’ என்ற தலைப்பில் அட்டை படத்தில் வெளியான ஒரு செய்தி தான் காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் பற்றி அளித்த பேட்டி ஒன்று வைரலானது. அந்த பேட்டியில் பேசிய அவர், அவர். 1996-ல் அஜித் என்னிடம் பணம் கேட்டார். என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் எனக்கு ஒரு 6 ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டார். நானும் அந்த 6 லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் வாங்கி கொடுத்துவிட்டேன்.அதன் பின்னர் அவர் எனக்கு ஒரு படம் பண்ணி தருவதாக சொன்னார்.

இப்படியே 1998 வரை இழுத்து விட்டார். அதன் பின்னர் வெடிமுத்து என்பவர் என்னிடம் வந்து ஒரு படம் எடுப்பதாக கூறினார். அப்போதுதான் அவள் வருவாளா திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன். அதேபோல அஜிதிக்கும் 12 லட்ச ரூபாயை கொடுத்தேன்.அதன் பின்னர் அஜித் எனக்கு போன் செய்து வெடமுத்துவிற்குி நீங்கள் உதவி செய்ய வேண்டாம் உங்களுக்கு நான் உங்களுக்கு தனியாக ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்றார்.அப்போது இந்த பணத்தை நான் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று சொன்னதால் நானும் விட்டுவிட்டேன்.பின்னர் அந்தப் படமும் சரியாக ஓடவில்லை அதன்பின்னர் பணத்திற்காக நான் அஜீத்தை தொடர்பு கொண்டால்

-விளம்பரம்-

அப்போதுதான் சுரேஷ் (அஜித் மேனஜர்) என்பவன் போனை எடுத்து அஜித் வெளியில் இருக்கிறார், அஜித் பேசிக் கொண்டிருக்கிறார் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டே இருந்தான். நான் அஜித் என்னிடம் பணம் வாங்கியிருக்கிறார் எனக்கு படம் பண்ணி தர தேவையில்லை என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுங்கள் நின்றேன். மேலும் 1996 ஆம் ஆண்டு வாங்கிய 18 லட்சம் இன்று என்ன மதிப்பு அதை இதுவரை கொடுக்கவே இல்லை. இதனிடையே நான் முதலில் கொடுத்த 6 லட்சத்தில் வாங்கவில்லை என்று சத்தியம் செய்கிறான்.

வீடியோவில் 7 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படியே போக ஒரு கட்டத்தில் நான் பணமே வாங்கவில்லை என்று சொல்லிவிட்டார்.இவனுக்கு பணம் வாங்கியதை நினைவு இல்லை என்றால் தற்போது 50 கோடி 40 கோடி சம்பளம் வாங்குற இப்போது நான் கஷ்டத்தில் இருக்கிறேன் உனக்கு லெட்டர் கொடுத்தால் அதற்கு பதில் சொல்வது கிடையாது.இப்படி ஒரு நடிகன் வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்வானா இன்று நீ 40 ,60 கோடி சம்பாதிக்க என் பணத்தைகுடுடா, ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க. எனக்கு நீ படம் பண்ணி தர வேண்டாம்டா என் பணத்தை கொடுடா என்று புலம்பித் தள்ளி இருந்தார் அந்த தயாரிப்பாளர்.

Advertisement