13 வயசுல இவன பாத்து ‘யாருப்பா இவன், கெத்தா இருக்கேன்னு சொன்னேன், இப்போ இவன் எனக்கு சொந்தம்’ – அம்மு அபிராமியின் அசரவைக்கும் குட்டி ஸ்டோரி.

0
1196
abhirami
- Advertisement -

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இளம் நடிகையான அம்மு அபிராமி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அம்மு அபிராமி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் புதிய மஹிந்திரா தார் காரை வாங்கி இருக்கிறார். மேலும், இதுகுறித்து ஒரு உருக்கமான கதையையும் பதிவிட்டுள்ளார். அதில், 2012 ஆம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது விருகம்பாக்கம் சிக்னலில் நானும் என் அப்பாவும் நின்று கொண்டிருந்த போது தான் நா இவனை கண்டேன். என்னுடைய முதல் காதல் முதல் கிரஷ், ‘மஹிந்திரா தார்’ நான் இதுவரை இப்படி ஒரு அழகான காரை பார்த்ததே கிடையாது.

நான் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் எனக்கு பெரிதாக கார் மீது ஆசையும் கிடையாது. விருப்பமே இல்லாத ஒரு பெண்ணிற்கு இவன் மீது வந்த ஆசைக்கு காதல் என்று தான் சொல்ல வேண்டும். நான் என்னுடைய அப்பாவிடம் கேட்டேன் ‘யாருப்பா இவன் இப்படி இருக்கான் கெத்தா’ என்று சொன்னேன். ஒரு தந்தையாக என்னுடைய அப்பா நான் யாரையோ சைட் அடிக்கிறேன்னு தான் நினைத்தார். பின்னர்தான் தெரிந்தது நான் பெயர்கூட தெரியாத ஒரு காரை சொல்கிறேன் என்று. அப்போது என் அப்பா சொன்னார் ‘அது தான் ‘தார்’செம வண்டி கெத்தா இருக்கும். இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது சிக்னல் விழுந்தது அந்த காரும் எங்களை கடந்து சென்று விட்டது. அப்போது நான் என் தந்தையிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது நான் காருன்னு ஒன்னு என் வாழ்க்கையில வாங்குனா அது மொதல்ல ‘தாரா’ மட்டும்தான் இருக்கும் என்று சொன்னேன்.

-விளம்பரம்-

என்னுடைய தந்தையும் கண்டிப்பாக கண்ணு, நல்லா கடினமாக உழைத்தாள் உன்னால கண்டிப்பா ஒரு நாள் வாங்க முடியும்னு சொன்னார். இப்போ கட் பண்ணா 2021 நான் இது உண்மையா என்று என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன். இப்போ நான் தார் காரை வாங்கி இருக்கிறேன் இவன் எனக்கு சொந்தம்.மீண்டும் என்னுடைய 13 வயதிற்கு சென்று என்னை நானே கட்டிப்பிடித்து நீ சாதித்து விட்டாய் அபி என்று சொல்லவேண்டும் என்பது போல இருக்கிறது. நான் அனைவருக்கும் சொல்ல விரும்புவது பெரிதாக கனவு காணுங்கள், கடினமாக உழையுங்கள், ஒருநாள் கண்டிப்பாக நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் என்று தன்னுடைய குட்டி ஸ்டோரி அழகாக சொல்லியிருக்கிறார்.

Advertisement