4 சிறுவர்கள் உட்பட அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று. (அவர் பயந்த மாதிரியே ஆகிடிச்சே)

0
1925
aswin
- Advertisement -

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி நாடே கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் போட்டி முக்கியமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளனர். சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அஸ்வின், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்வின் மனைவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement